இந்தியா 405 ஓட்டங்களால் முன்னிலை கோலி இரட்டைச் சதம்

  • இந்தியா 405 ஓட்டங்களால் முன்னிலை கோலி இரட்டைச் சதம்

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நாணயசுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 57 ஓட்டங்களை இலங்கை சார்பில் பெற்றுக் கொடுத்தார்.
இந்திய தரப்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்த, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீரர் ராகுல் ஏழு ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வௌியேறினார்.
இந்தநிலையில், 3வது வரிசையில் இறங்கிய புஜாராவுடன் ஜோடி சேர்ந்த முரளி விஜய் சிறப்பாக ஆடி சதமடித்து 128 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 209 ஓட்டங்களை சேர்த்தது.

பின்னர் புஜாராவுடன் இணைந்த விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். மறுமுனையில் நங்கூரமாய் நின்ற புஜாரா 143 ஓட்டங்களை எடுத்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் வந்த ரஹானே 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய இந்திய அணித் தலைவர் விராட் கோலி இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 267 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 213 ஓட்டங்களைக் குவித்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

ரோஹித் ஷர்மாவும் தன் பங்குக்கு சதமடித்து 102 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.


இதற்கமைய, இந்தியா 405 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடுகிறது.

  •  யுவராஜ் சிங் ஓய்வு தகவல்

யுவராஜ் சிங் ஓய்வு பெற உள்ளதாக வெளியாகிவரும் தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் கசிய விடுவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன.

35 வயதாகும் யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தார். ஆனால், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணியில் விளையாட இவருக்கு இடம் கிடைக்வில்லை.இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், வீரர்களின் உடல்தகுதி விஷயத்தில் சமரசம் ஏதுமின்றி வீரர்களை தேர்வு செய்து வருகிரது. இந்த விஷயத்தில் கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் உறுதியாக உள்ளனர்.

யுவராஜ் சிங்கின் உடல் தகுதியை காரணம் காட்டியே போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என செய்திகள் வெளியாகின்றன. அதற்கு ஏற்ப தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் யுவராஜ் தேர்ச்சியடையவில்லை.இதனால், இலைங்கைக்கு எதிரான தொடரிலும் அவர் பெயர் பரிந்துரைக்கப்பவில்லை. எனவே, தற்போது அவர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், யுவராஜ் ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து அதிரடியாக விலகிவிட்டு தேசிய பயிற்சி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பிசிசிஐ சற்று அதிருப்தியில் உள்ளதாம்.

மேலும், விரைவில் தனது 36 ஆம் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் யுவராஜ் தீவிர பயிற்சி பெற்று தனது உடல் தகுதியை நிறுபித்து இந்திய அணியில் மீண்டும் இணைய முயற்சித்து வருகிறாராம்.யுவராஜ தனனை நிறுபித்தால் இலங்கைக்கு எதிரான தொடரிலேயே அவர் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என்றும் பிசிசிஐ வட்டாரங்களில் தகவல் வெளியாகிறதாம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page

Loading...

Leave a Comment

16 + 2 =