கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் தெரிவு

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் தெரிவு

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரொறன்ரோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக ரொறன்ரோ விளங்குகிறது.

அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

மேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

தமிழ் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அபி ஜெயரட்னம், கலப்பு ஊடக கலை மூலம் தமிழ் கதைகளை காப்பாற்றுவதற்கும், கதையளிப்பதற்கும் ஆர்வமாக உள்ளார்.

Jane மற்றும் Finchஇன் அகதி குடும்பத்தில் வளர்ந்தவர். தனது தனிப்பட்ட போராட்டங்களுடன் அணுகக்கூடிய ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்து வருகின்றார்.

கல்வியின் தரம் மற்றும் பொறுப்பு அலுவலக சபையில் நியமிக்கப்பட்ட அபி, ரொறன்ரோ இளைஞர் சமபங்கு தொடர்பான அமைப்பின் ஆலோசனைகளில் பங்கேற்று வருகிறார். இனவாதத்தின் எதிர்மறையான தாக்கங்களுக்கு ஏதிராகவும் போராடி வருகின்றார்.

 

தாயை கொலை செய்த மகள் கைது

கனடாவில் பெற்ற தாயை கொலை செய்த மகளை பொலிசார் கைது செய்துள்ளனர். மொண்ட்ரியலில் இச்சம்பவம் கடந்த மாதம் 28-ஆம் திகதி நடந்துள்ளது.

மெங் யீ (34) என்ற பெண் தனது 61 வயதான தாயுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று தனது தாயை கத்தியால் மெங் குத்தியுள்ளார்.

வலியை பொறுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த பெண் அங்கிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.
இதையடுத்து பொலிசார் மெங்-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.

இதனிடையில் மெங்-குக்கு மனநல கோளாறு இருப்பதாகவும், அவர் அடிக்கடி தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார் எனவும் அயலவர்கள் கூறியுள்ளனர்.

Loading...

Leave a Comment

2 × four =