கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதி

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதி விடுதலை

தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதியை கனேடிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த கொலை தொடர்பான விசாரணை மீள பரிசீலிக்கப்பட வேண்டும் என கனேடிய அரச தரப்பினரின் வேண்டுகோளை குபேக் மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எப்படியிருப்பினும், இவர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேடிய உயர் நீதிமன்ற சட்டத்திற்கு அமைய குறிப்பிட்ட காலவரையை மீறியதன் காரணமாக விசாரணையை தொடர முடியாது என கூறியே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கனேடிய மொன்றியலில் உள்ள அவரது தொடர்மாடியில் வைத்து, 2012ஆம் ஆண்டு 21 வயதான அவரது மனைவியின் உடல் காவல்துறையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் கனடாவில் 88,000 பேர்கள் வரை வேலை இழப்பு

ஜனவரி மாதம் கனடாவில் 88,000 பேர்கள் வரை வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த செங்குத்தான சரிவு கடந்த ஒன்பது வருடங்களில் ஏற்பட்ட மோசமான சரிவென கனடா புள்ளிவிபரவியல் தெரிவித்துள்ளது.

பெரும்பாலாவை பகுதி-நேர வேலைகளாகும் என கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னொரு புறம் கடந்த மாதத்தில் பொருளாதாரம் 49,000 முழு-நேர வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதென ஏஜன்சி தெரிவித்துள்ளது.

ஜனவரியில் ஒட்டு மொத்த சரிவு ஏற்பட்ட போதிலும் வேலை உருவாக்கத்தில் ஒரு வலுவான ஏற்றத்தை கனடா கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மேலதிகமாக 41,410 முழு-நேர வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி 2.8சதவிகித அதிகரிப்பை காட்டுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண ரீதியில் ஒன்ராறியோ மற்றும் கியுபெக் மிகப்பெரிய குறைவை கடந்த மாதம் காட்டியுள்ளதாகவும் அதே நேரம் நியு பிறவுன்ஸ்விக் மற்றும் மனிரோபா கூட நிகர இழப்புக்களை எதிர் நோக்கின எனவும் கூறப்பட்டுள்ளது.

Loading...

Leave a Comment

5 + 7 =