மக்களின் சுதந்திர போக்குவரவு” ஒப்பந்த மீறல்! சுவிஸ் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு!

மக்களின் சுதந்திர போக்குவரவு” ஒப்பந்த மீறல்! சுவிஸ் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு!

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக சுவிஸ் இல்லாவிட்டாலும் ”மக்களின் சுதந்திர போக்குவரவு” ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியனின் 28 நாடுகளுடனும் அமுலில் உள்ளது.

இதன்படி சுவிட்சர்லாந்து மாகாணங்கள், வேலைதேடி வரும் ஐரோப்பிய யூனியனின் குடிமகன் ஒருவரிடம் இரண்டு ஆவணங்களைத்தான் கேட்கவேண்டும்.

ஒன்று முறையான அடையாள ஆவணம், இன்னொன்று வேலைக்கான சான்று. சுவிட்சர்லாந்தின் அனைத்து மாகாணங்களும் “மக்களின் சுதந்திர போக்குவரவு”கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்று ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியுள்ளது.

 

அது தனது குற்றச்சாட்டை 19 பக்கங்கள் கொண்ட ஆவணமாக தயாரித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று இந்த இரண்டு ஆவணங்கள் மட்டுமல்லாது, சுவிட்சர்லாந்தின் சில மாகாணங்கள வாடகை அல்லது முழுமையான பணி ஒப்பந்தம், சம்பளம் மற்றும் வேலை விவரங்கள் போன்றவற்றையும் கேட்கின்றன என்பதே.

இது குறித்து Association of cantonal migration துறைகளின் தலைவரான Marcel Suter கருத்து தெரிவிக்கும்போது, சட்ட ரீதியாகப் பார்க்கும்போது சில மாகாணங்கள் ‘மக்களின் சுதந்திர போக்குவரவு கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்பது உண்மைதான், ஆனால், இதில் சில நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன உள்ளன என்கிறார்.

Ticino மாகாணத்தின் பாதுகாப்பு இயக்குநரான Norman Gobbi, மாகாணம் தனது வழக்கங்களை மாற்றிக்கொள்ளாது, ஏனெனில் இது மாகாணத்தின் பாதுகாப்பு குறித்த விடயம் என்கிறார். Ticino மாகாணம் வேலை தேடி வருபவரின் குற்றப்பின்னணி குறித்த விடயங்களையும் கேட்கிறது. மோசமான குற்றவாளிகளை மாகாணத்திற்குள் அனுமதிக்காமல் இருப்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக Norman Gobbi தெரிவிக்கிறார்.

Valais, Basel Country மற்றும் Basel City ஆகிய மாகாணங்களும் குற்றப்பின்னணி குறித்த விடயங்களைக் கேட்கின்றன என்றாலும், அவை ஆவணங்களைக் கேட்காமல் சுய சான்றளிப்பை மட்டுமே கேட்கின்றன.

ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐரோப்பிய யூனியன் இது தொடர்பாக தன்னுடன் சுவிட்சர்லாந்து புதியதொரு ஒப்பந்தம் செய்யவேண்டும் என்னும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகளுக்காக Roberto Balzaretti என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுவிஸில் குடியுரிமை பெற போராடும் இத்தாலி தம்பதியினர்! பல அவமானங்களுக்கு முகம் கொடுப்பு!

சுவிஸில் வாழும் இத்தாலி நாட்டை சேர்ந்த தம்பதிகள் சுவிஸின் குடியுரிமை பெற நீண்ட காலமாக போராடி வந்த நிலையில் கணவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு மனைவிக்கு மறுக்கப்பட்ட விடயம் பாரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

இத்தாலியரான Salvatore, இவரது மனைவி Antonia Scanio மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுக்கு, குடிமக்களாகும் தகுதியில்லாதவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் பாரிய வாதங்களை உருவாக்கியதை தொடர்ந்து கடந்த மாதம் 29ம் திகதி மீண்டும் அவர்களின் கோப்புகளை ஆய்வு செய்த அதிகாரிகள் மீண்டும் ஒரு அதிர்ச்சிகாரமான விடயத்தை அறிவித்துள்ளார்கள்.

அதன்படி கணவர் Salvatore மற்றும் மூன்று பிள்ளைகளுக்கும் குடியுரிமை அளிக்கப்பட்டு , மனைவி Antonia க்கு குடியுரிமை வழங்கப்படவில்லை.

18 வயது முதல் சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் Antonia Scanio, சுவிட்சர்லாந்தின் வரலாறு, நிறுவனங்கள் மற்றும் நாட்டில் உற்பத்தியாகும் 3 ஆறுகளின் பெயரைக் கூட சரியாக கூறாமையே இதற்குரிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

எனினும் , Antonia Scanio வை கேள்வி கேட்ட அதிகாரிகள் அவரை எரிச்சலூட்டும் வகையில் அவமானப்படுத்தியமையால் அவருக்கு விடைகள் தெரிந்திருந்தும் சரியாக பதில் கூற இயலவில்லை என தம்பதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading...

Leave a Comment

3 × three =