Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தங்க இடபத்தில் எழுந்தருளிய அலங்கார கந்தன் - சப்பரம் இழுப்பது தவிர்ப்பு


வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய 23ஆம் திருவிழாவான இன்று மாலை வள்ளி, தெய்வாணை சமேதராய் வேலவன் இடப வாகனத்தில் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.

நாட்டில் கோவிட் -19 பரவல் கட்டுப்பாட்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணும் வகையில் நல்லூர் கந்தன் இன்று சப்பரத்தில் வீதியுலா வரவில்லை

நல்லூர் பதியில் அதிகளவான பக்தர்கள் இன்றும் திரண்டனர். அதனால் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய இடப வாகனங்களில் வள்ளி, தெய்வாணை சமேதராய் நல்லூரான் வெளிவீதியுலா வந்து காட்சியளித்தார்.

இதேவேளை, நாளை காலை இரதோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அடியவர்களின் வசதி கருதி சண்முகப் பெருமானை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை தரிசிக்க முடியும் என்று ஆலய தர்மகர்த்தா அறிவித்துள்ளார்.





No comments