இந்திய அணியின் சாதனைத் தலைவராகத் திகழ்ந்த எம்.எஸ்.டோனி, கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என மேற்கிந்தி தீவுகளின் சகலதுறை ஆட்டக்காரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, டுவைன் பிராவோ ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடல் ஒன்றில் கூறுகையில், “கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனிதான். மிக எளிதாகச் சந்தித்து பேசக்கூடிய வீரர்களில் அவரும் ஒருவர்.
கிரிக்கெட் களத்திற்கு வெளியே மிக இயல்பாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருப்பார். அவரது அறைக்கதவு எந்த நேரமும் திறந்தே இருக்கும்.
மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பற்றி நீங்கள் எப்போது பேசினாலும் சரி. அவர்களில் டோனிதான் மிகவும் தன்னடக்கம் கொண்டவராக இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பு வாய்ந்த ஒரு அணி. எங்களுக்குத்தான் விசுவாசமான இரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்குரிய எல்லா பெருமையும் தலைவர் டோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரையே சாரும். அணி நிர்வாகிகளும் டோனி, பிளமிங் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
எனவே முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது வெளிப்புற தலையீடு எதுவும் இருக்காது. இருவரும் கிரிக்கெட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள். அணி வீரர்களும் டோனி மீது மிகுந்த பாசம் வைத்துள்ளனர். அந்த சூழலே அருமையானது” என்று பிராவோ தெரிவித்துள்ளார்.









No comments