பீகாரில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்திலுள்ள பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இமயமலைப் பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கங்கையாற்றின் துணையாறுகளான கண்டகி, பாக்மதி, கோசி, மகாநந்தா ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக பீகாரின் வடக்கு மாவட்டங்களில் 24 இடங்களிலுள்ள ஆறுகளில் அபாய அளவைத் தாண்டிக் கரைபுரண்டு வெள்ளம் பாய ஆரம்பித்துள்ளன.
இதனால் ஆற்றங்கரையோர ஊர்களைச் சேர்ந்த 10 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 7 அணிகளும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் 8 அணிகளும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









No comments