Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பர்முயுலா-1 70ஆவது ஆண்டுவிழா: மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம்

 

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஐந்தாவது சுற்றான 70ஆவது ஆண்டுவிழா விஷேட சுற்றில், ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் ஐந்தாவது சுற்றான 70ஆவது ஆண்டுவிழா விஷேட சுற்று, நேற்று சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 306.198 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 19 நிமிடங்கள் 41.993 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹாமில்டன், 11.326 வினாடிகள் மட்டுமே பின்தங்கிய நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 19 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, 19.231 வினாடிகள் பின்தங்கிய நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்த மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் 15 புள்ளிகளை பெற்றுக்கொண்டார்.

நடப்பு ஆண்டு பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரில் இதுவரை ஐந்து சுற்றுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், லீவிஸ் ஹாமில்டன் 105 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 77 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 73 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஆறாவது சுற்றான ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரிக்ஸ் சுற்று எதிர்வரும் 16ஆம் திகதி பார்சிலோனா-கேடலூன்யா ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

No comments