முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தார் என உண்ணாவிரத போராட்டம் நடத்திவரும் பல்கலைகழக மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்.
போராடும் மாணவர்களின் உணர்வு எனக்கும் உள்ளது. இந்த தூபியை இடித்தது எனக்கும் கவலைதான். அதை மீள அமைக்க உரிய வழிமுறைகளில் நான் தயாராக இருக்கிறேன். இது பற்றி மாணவர்களுடன் பேசவுள்ளேன் என சந்திப்பின்போது துணைவேந்தர் தெரிவித்ததாக சித்தார்த்தன் கூறியுள்ளார்.









No comments