தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடைபெறவுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல், மே, மாதங்களை காட்டிலும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல் உயிரிழப்புகளும் பரவலாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இந்தச் சூழலில் இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கத்தை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது









No comments