Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் உயிரிழப்பு!



புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். www.tamilnews1.com 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் நிதிஷ் வீரா, சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மே 17) காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.

விஜயகாந்தின் வல்லரசு படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்த நிதிஷ் வீராவை தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம் அடையாளப்படுத்தியது. இதன் பின்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நல்ல நடிகர் என பெயரெடுத்தார். www.tamilnews1.com 

ரஜினியின் காலா, அசுரன், நேற்று இன்று, ராட்சசி போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். www.tamilnews1.com 

நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் நடிகர் நிதிஷ் வீரா நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறமை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com 

No comments