Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இன்றைய ராசி பலன் - 09.09.2021


மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண பொருட் சேர்க்கை உண்டாகும்.

No comments