Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பச்சை அலங்காரத்தில் நல்லூர் ஆறுமுக சுவாமி!


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர் திருவிழாவான இன்றைய தினம் ஆறுமுக சுவாமி பச்சை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்காட்சி அளித்தார். 

அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முன்னதாக ஆறுமுக சாமி மஞ்சள் அலங்காரத்தில் உள்வீதி உலா வந்தார். 
 
அதனை தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி , தெய்வானை சமேதரராய் , சிறிய தேரில் ஆரோகணித்து , உள்வீதியுலா வந்தார். 
 
பின்னர் மீண்டும் ஆறுமுக சுவாமி பச்சை அலங்காரத்தில் (பச்சை சாற்றால்) பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். 
 
கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்தர்களின் பங்கேற்பின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் இடம்பெற்று வருகின்றன. 
 
அதனால் இம்முறை தேர் திருவிழாவின் போது ஆலயத்தின் சித்திர  தேர் இழுக்காது ,  வேல் பெருமான், வள்ளி , தெய்வானையுடன் உள்வீதியில்  சிறிய தேரில் ஆரோகணித்து அருள்காட்சி  அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது . 








No comments