Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

"சர்வதேச கனவை நோக்கி நகரப்போகிறேன்" - தேசிய ரீதியில் பளு தூக்கலில் மூன்று சாதனைகளை நிலைநாட்டிய இளைஞன்!


தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர்,  squat பிரிவில் 330 கிலோ கிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார். இதில் squat மற்றும் deadlift பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். 

அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார். 

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் தேசிய ரீதியில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் மூன்று சாதனைகளை படைத்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதை அடுத்து பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

சற்குணராஜா புசாந்தன் தெரிவிக்கையில், 

60 வயதிலும் என்னால் பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் என் கனவுகளை நோக்கி இளமை உள்ளவரைதான் என்னால் போராட முடியும்.

தற்காலிகமாக எனது வேலையில் இருந்து விலகுகிறேன்.
முற்று முழுதாக என்னை என் கனவுகளுக்காக அர்ப்பணிக்கப் போகிறேன். சர்வதேச கனவை நோக்கி நகரப்போகிறேன்.
வெற்றி பெறுவேனா..? இல்லை தோல்வியடைவேனா..
என்று தெரியாது. 

ஆனால் நிச்சயமாக முடியுமானவரை எனது கனவுக்காக போராடுவேன். என்றோ ஒரு நாள் கனவுகள் தொலைந்ததை நினைத்து கவலைப்படுவதை விட இன்றே முயற்சி செய்து பார்க்க போகிறேன்.

கடந்த ஆறு வருடங்களாக எனக்கு ஆதரவாக இருப்போர் என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தினர். மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகளும் அன்பும் என தெரிவித்தார். 

No comments