Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூர் தேர் புனருத்தாரணம் செய்யப்பட்டு வெள்ளோட்டம்!


நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி, புதன்கிழமை  காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.  

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் ஆலயத்துக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டது.  

அந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தினால், அதன் அபாயத்தை உணர்ந்த ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை தொடக்கி வைத்தார். 

அந்த தேரே 1964ஆம் ஆண்டு முதல் மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது, இழுக்கப்பட்டு வந்தது. 

அந்த தேரே தற்காலத்தில் மீண்டும் புனருத்தாரணத் திருப்பணி நிறைவுற்று எதிர்வரும் 24 ஆம் திகதி, புதன்கிழமை  காலை 7 மணிக்கு வெள்ளோட்டம் காணவுள்ளது.






No comments