Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023 இன் விருது வழங்கல் நிகழ்வு


“குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

“உயிரைக்கொல்லும் போதைப்பொருள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் குறும்படப்போட்டிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து 63 குறும்படங்கள் கிடைக்கப்பெற்றன.

அவற்றில் சிறந்த 10 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இயக்குனர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 

அத்துடன் இயக்குனர் கவிவர்மனின் "யாவரும் கேளீர்" குறும்படம் முதல் இடத்தினையும் , இயக்குனர் கெனிஸ்டன் ஜோனின் "30 செக்கன்" குறும்படம் இரண்டாம் இடத்தினையும், இயக்குனர் கே.கோடீஸ்வரனின் "வசம்' குறும்படம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. அவர்களுக்கான விருதுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வழங்கினார். 

முதல் 03 இடங்களையும் பெற்ற குறும்படங்கள் விருது விழாவில்  திரையிடப்பட்டு அது தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது. 










No comments