மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
ரிஷபம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 10.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும். மதியத்திற்கு பின் மன அமைதி ஏற்படும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.12 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கிய பாதிப்புகளால் மனநிம்மதி குறையும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படவும். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
மகரம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.
No comments