Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மீண்டும் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா கிங்ஸ்


2024 லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவீகரித்துள்ளது.

கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில்  கோல் மார்வெல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று  ஜப்னா கிங்ஸ் அணி மீண்டும் கிண்ணத்தை வென்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Bhanuka Rajapaksa அதிகபட்சமாக 82 ஓட்டங்களை பெற்றதுடன், Tim Seifert 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் Asitha Fernando 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Rilee Rossouw ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 106  ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Kusal Mendis ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.






No comments