வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே உள்ள கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
நல்லூர் கைலாசப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகத்தை பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் ஏற்றி கோவில் வீதி வழியாக் நல்லூரான் தெற்கு வாசல் வளைவினை அடைந்து தைப்பூச நன்நாளான இன்று தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் வளைவு திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நெல்மணிகள் நிரப்பபட்ட பெட்டகம் நல்லூர் ஆலயத்தினை அடைந்து ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியாரிடம் கையளிக்கப்பட்டது. இவ் அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டு சின்னங்களைத் தாங்கியவாறு தவில் நாதஸ்வரம் இசைக்க, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது.
அலங்கார வளைவின் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூஜைகள் இடம்பெற்றன.
சைவசமயப் பெரியவர்கள்,நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments