(Salt House Creative International Film Festival) நடாத்திய சர்வதேச அவுஸ்திரேலிய திரைப்பட போட்டியில் 28 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நூறிற்கும் மேற்ப்பட்ட குறுந்திரைப் படங்களில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மன் 2025 ஆம் ஆண்டிற்கான "சிறந்த இயக்குனர்" எனும் சர்வதேச விருதினைப் பெற்றுள்ளார்.
அவரது இயக்கத்தில் வெளியிடப்பட்ட "மடமை தகர்" என்னும் குறுந்திரைப்படமே இவ்வாறு சர்வதேச விருதினைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் குவியம் ஊடக நிறுவனத்தினால் 2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குறுந்திரைப்படப் போட்டியில் இலங்கை முழுவதிலும் இருந்து 63 குறுந்திரைப்படங்கள் போட்டிக்கு வந்திருந்த நிலையில்,குறித்த இளைஞனின் இயக்கத்தில் உருவான "யாவரும் கேளீர்" எனும் குறுந்திரைப்படம் "சிறந்த படம்" "சிறந்த இயக்குனர்" மற்றும் "சிறந்த ஒளிப்பதிவாளர்" என்னும் மூன்று விருதுகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments