கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறினார்.
வத்திக்கானில் உள்ள காசா சென்டா மார்த்தாவில் (Casa Santa Marta) உள்ள தமது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
முதுமையின் காரணமாக சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் கோளாறு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், மார்ச் 23 குணமடைந்து வைத்தியசாலையிலிந்து திரும்பியிருந்தார்.
வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நேற்றைய தினம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2013 மார்ச் 13ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசராக பிரான்சிஸ் நியமிக்கப்பட்டார். உலகளவில் 1.3 பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவராக அவர் விளங்குகின்றார்.
1936 டிசம்பர் 17 இல் பிறந்த ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ (Jorge Mario Bergoglio) எனும் இயற்பெயருடைய பாப்பரசர் பிரான்சிஸ், ஆர்ஜென்டினாவிலிருந்து இத்தாலிக்கு 1936 ஆம் ஆண்டு குடியேறினார்.
அவர் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய முதல் லத்தீன் அமெரிக்கர் ஆவார்.
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தபோதிலும், அவர் ஒரு சுறுசுறுப்பான பாப்பரசராக பணியாற்றி வந்தார்.
2024 செப்டம்பரில், அவர் சிங்கப்பூர் உட்பட நான்கு நாடுகள் கொண்ட ஆசிய-பசிபிக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். பாப்பரசராக அவர் பதவி வகித்த காலத்தில மேற்கொண்ட மிக நீண்ட சுற்றுப் பயணமாக இது கருதப்படுகின்றது.
No comments