Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறந்த நடிகர் உள்ளிட்ட 04 விருதுகளை சுவீகரித்த ‘கூத்தாடி’ திரைப்படம்


AZONWAY PICTURES தயாரிப்பில் செல்வின் தாஸ் வழங்கும் ‘கூத்தாடி’ திரைப்படம் அவுஸ்ரேலியாவில் ATFIA 2025 (Australia Talent and Film International Award) சர்வதேச விருது வழங்கும் விழாவில் 

சிறந்த நடிகர் -செல்வின் தாஸ் 

சிறந்த இயக்குனர்-கவாஸ்கர் காளியப்பன் 

சிறந்த இசையமைப்பாளர்-பிரதாப் கண்ணன்

சிறந்த துணை நடிகர்-முல்லை நியூட்டன் என நான்கு விருதுகள் பெற்றுள்ளது.

இலங்கை - யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்து வருகிறார். சினிமாத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்து, நடித்து வருகிறார்.

அவுஸ்ரேலியா, இந்தியா, மலேசியா மற்றும் ஈழத்து கலைஞர்கள் ஒன்றிணைந்து நடித்த ‘கூத்தாடி’ திரைப்படத்தில் செல்வின் தாஸ் தெருக்கூத்து கலைஞனாக 12 வேடங்களில் நடித்துள்ளார். (தெருக்கூட்டத்தில் இரணியன் வேடத்தில் அடவு கட்டி கூத்தாடியது கூடுதல் சிறப்பு)

இத்திரைப்படம் வெகு விரைவில் உலகமெங்கும் திரையிடத் தயாராகி வருகிறது.




No comments