யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை ஐயனார் ஆலய வடக்கு வீதியில் பொது வழிபாட்டிற்கான சிவனின் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலயத்தில் பாஸ்கரன் காயத்திரியின் முற்றுமுழுதான நிதி பங்களிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சன்னிதானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு , எண்ணெய் காப்பு நடைபெற்று , இன்றைய தினம் காலை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, தொடர்ந்து குடமுழுக்கு இடம்பெற்றதுடன் , தொடர்ந்து சிவலிங்கத்திற்கான அபிஷேக ஆராதனையும் இடம்பெற்றது.
அதேவேளை ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் இருந்து ஐயனார் யானை வாகனத்தில் எழுந்தருளி கடலில் தீர்த்தமாட சென்றதுடன் , வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
No comments