முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட 'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
திரையரங்கு நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் திரையிடப்பட்ட கண்ணம்மாவிற்கு பலத்த வரவேற்பும் பாராட்டக்களும் கிடைக்கப்பெற்றன. அடுத்த திரையிடல்கள் தொடர்பில் படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள்.
2J மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன் படத்தொகுப்பை சிவநேசன் மேற்கொண்டுள்ளார்.
மூத்த கலைஞர்களான ராஜா மகேந்திரசிங்கம், ஜூட் கொலின்ஸ், சபேசன் சண்முகநாதன், கேப்டன் பாஸ்கரன், சுவிஸ் ரகு, ஜாஸ்மின் (பவுண் அக்கா), ஜீவேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பல இளம் கலைஞர்களும் இதில் நடித்துள்ளார்கள்.

















No comments