அரியாலை சனசமூக நிலையத்தின் 77ம் ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் விளையாட்டு நிகழ்வுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தன.
அரியாலை காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என பல்வேறு தரப்பினருக்குமான விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் என்பவற்றில் பங்கு பற்றினார்கள்
அதேவேளை குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாறும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருந்தவநாதன் அனோசன் சார்பாக அக்கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டார்
குறித்த நிகழ்வின் பரிசளிப்புக்கான நிதி அனுசரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருந்தவநாதன் அனோசன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






.jpeg)
.jpeg)
.jpeg)



No comments