Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். இருந்து கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை


வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை காலை எடுத்துச்செல்லப்பட்டது.

திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரான திருநெல்வேலி கென்னடி வீதியிலுள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.








No comments