Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்


வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

இன்று காலை 7 மணியளவில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், காலை 8 மணியளவில் வசந்த மண்டப பூசைகளும் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.

கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சக்கரத்து ஆழ்வார் உள்வீதி உலா இடம்பெறவுள்ளதுடன், 7ஆம் திருவிழாவான 15ஆம் திகதி முதல் வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 17ஆம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 19ஆம் திகதி வெண்ணைத் திருவிழாவும்,   21ஆம் திகதி கம்சன் போர் திருவிழாவும், 23ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 24ஆம் திகதி சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

தேர் திருவிழா  25ஆம் திகதியம் 26ஆம் திகதி சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன








No comments