Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் மூன்று சுற்றுகள் இரத்து!


இளசுகளின் விருப்ப விளையாட்டான பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின், மூன்று சுற்றுகளை இரத்து செய்வதாக பர்முயுலா-1 கார்பந்தய ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அசர்பைஜான், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் இரத்து செய்யப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் முதலில் ஜூன் 7ஆம் திகதி நடைபெற இருந்தது. சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் செப்டம்பர் 20ஆம் திகதி நடைபெற இருந்தது.

எனினும், அடுத்த மாதம் ஆஸ்திரியாவில் 2 தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், டிசம்பரில் சீசன் நிறவடைவதற்குள்ளாக 15 முதல் 18 பந்தயங்கள் வரை நடத்த முடியும் என்று நம்புவதாக பார்முலா 1 அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளது.

மேலும், 8 சுற்றுகள் இரசிகர்கள் இன்றி நடத்தப்படும். நிலைமை சரியானால் அதற்கு தகுந்த வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, நடப்பு ஆண்டுக்கான பர்முயுலா-1 கார்பந்தயத் தொடர் இன்னமும் ஆரம்பிக்கபடவில்லை. இதனால் இரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

No comments