Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்தியாவின் மிக மூத்த கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி காலமானார்


இந்தியாவின் மிக மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி நேற்று  (சனிக்கிழமை) காலமானார். வயது முதிர்வு காரணமாக  அதிகாலை 2.20 மணிக்கு வசந்த் ராய்ஜியின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது.

தெற்கு மும்பையில் உள்ள வல்கேஸ்வரில் ராய்ஜி காலமானார் என அவரது மருமகன் சுதர்ஷன் நானாவதி தெரிவித்தார்.

வசந்த் ராய்ஜிக்கு தற்போது 100 வயது என்பதுடன், இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

வலது கை துடுப்பாட்ட வீரரான ராய்ஜி 1940ஆம் ஆண்டுகளில் 9 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 277 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஓட்டங்கள் 68 ஆகும்.

அவர் இந்திய கிரிக்கெட் கிளப் ஒன்றுக்காக அறிமுகமானார். மும்பை கிரிக்கெட்டுக்கு 1941ஆம் ஆண்டு அறிமுகமானார். விஜய் மெர்சண்ட் தலைமையில் விளையாடினார்.

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்குபவரான இவர் சி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்தியா தன் முதல் டெஸ்ட்டை பாம்பே ஜிம்கானாவில் விளையாடும் போது இவருக்கு வயது 13.

தெற்கு மும்பையில் சந்தன்வாதி இடுகாட்டில் வசந்த் ராய்ஜியின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

இவருக்கு 100 வயதானதையொட்டி சச்சின் டெண்டுல்கரும், ஸ்டீவ் வாஹும் இவரைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments