Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனோ தொற்று 1,905 ஆக அதிகரிப்பு.


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 13 பேர் வௌிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஏனைய மூன்று பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 55 பேர் பூரணமாக குணமடைந்து நேற்றைய தினம் வௌியேறியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில் 1342 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 552 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments