அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதி வருட மாணவர்களின் பரீட்சைகள் வரும் ஜூன் 22ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி ஓகஸ்ட் 15ஆம் திகதிவரை இடம்பெறும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்பின்னர் மற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது கோரோனா தடுப்புக்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரை பல்கலைகழக வளாகத்திற்குள் ஒன்று கூடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
No comments