Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனோ தொற்று 8 மில்லியனை நெருங்குகின்றது!


கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனை அண்மிக்கின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 79 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 4 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றிலிருந்து 41 இலட்சத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அங்கு இதுவரை வைரஸ் தொற்றினால் 21 இலட்சத்து 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 1 இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக முறையே பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.

No comments