Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தள்ளிவைப்பு


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஒஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறன.

இதன்படி   93 ஆவது ஆஸ்கர் நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டு (2021) பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி  அமெரிக்காவில் உள்ள லொஸ்  ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒஸ்கர் வரலாற்றிலேயே நிகழ்ச்சிக்கான திகதிகள் மாற்றியமைக்கப்பட்ட நான்காவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக   1938 ஆம் ஆண்டும், 1981 ஆண்டும் நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

தற்போது வரலாற்றிலேயே நான்காவது முறையாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments