மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தேடப்படும் அர்ஜூன் மகேந்திரன், தனது பெயரை ஹர்ஜன் அலெக்ஸாண்டர் என மாற்றம் செய்துள்ளார் என்று சட்ட மா அதிபரால் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றுக்கு இன்று அறிவிக்கப்பட்டது.
சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) வழங்கிய அறிக்கையின் பிரகாரம் இந்தப் பெயர் மாற்றம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது என்று சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றுக்கு தகவலளித்தார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. எனினும் அவர் நாட்டிலிருந்து வெளியேறி சிங்கப்பூரில் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அர்ஜூன் மகேந்திரனைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இன்டர்போல், அர்ஜூன் மகேந்திரன், தனது பெயரை ஹர்ஜன் அலெக்ஸாண்டர் என மாற்றம் செய்துள்ளார் என்று இலங்கைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.









No comments