Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நடுகடலில் படகு மூழ்கியது - ஒருவர் மீட்பு - மூவர் மாயம்.


மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

காணமல்போன ஏனைய மூன்று மீனவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 622 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர், மலர், ஆனந்த், ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

வழக்காமாக மீனவர்கள் ஞாயிற்றுகிழமை காலை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியிருக்க வேண்டிய நிலையில், மூன்று நாட்களுக்கு மேலாக கரை திரும்பாததால், விசைப்படகின் உரிமையாளர் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் படகு மீனவர்களுடன் மாயமானதாக  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு படகுகளில் பத்து பேர் மாயமான மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர்.

ஆனால், மாயமான மீனவர் மற்றும் விசைப்படகுகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால், மீனவர்களின் உறவினர்கள் மீனவர்களை தேடும் பணியினை துரிதபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்ததன் பின்னர் கரை திரும்பும் வழியில், நடுக்கடலில் மூன்று நாட்களுக்கு முன் மாயமான விசைப்படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை மீட்டு  சிகிச்சைக்காக மணல் மேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இவருடன் மீன் பிடிக்கச் சென்று மாயமான மூன்று மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்தி ஆகியன ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments