கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இன்று காலை சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த சடலத்தில் துப்பாக்கி சூட்டு காயம் காணப்பட்டுள்ளது. அத்துடன் அருகில் பிஸ்ரல் ஒன்றும் காணப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போது , சடலமாக மீட்கப்பட்டவர் ஸ்ரீலங்கா விமான சேவையின் முகாமையாளராக முன்னர் கடமையாற்றியவர் எனவும் தற்போது சுயாதீன ஊடகவியலாளராகவும் , பத்தி எழுத்தாளருமாக ஊடகங்களில் கடமையாற்றி வரும் ராஜகிரியை சேர்ந்த ரஜீவ பிரபாஸ் ஜெயவீர (வயது 63) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
No comments