Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

“சதிலீலாவதி” வெற்றிக்கு கோவை சரளாவும் காரணம்.


சதிலீலாவதி’ திரைப்படத்தின் வெற்றிக்கு கோவை சரளாவும் ஒரு காரணம் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

பாலு மகேந்திரா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் மிகப் பெரிய திரைப்பட்டாளமே நடித்திருந்தது. இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கோவை சரளா நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  “கோவை மொழிவழக்கு என்று முடிவு செய்த உடனே  நாயகியை நானே முடிவு பண்ணிவிட்டேன்.

அதில் பாலு மகேந்திராவுக்கு ரொம்ப வருத்தம். கோவை சரளாவின் திறமை அப்போது பலருக்கும் தெரியாது. எனக்கு தெரிந்தது. அவர் அந்தப் படத்துக்குள் வந்ததுதான் எனக்கு ஸ்ப்ரிங் போர்டு மாதிரி அமைந்தது. ‘சதிலீலாவதி’ படத்தில் எனக்கு ஏதாவது பெயர் வந்தால்  அதில் 50 சதவீதம்  கோவை சரளாவுக்குக் கொடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments