Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்


தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50இற்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கண்ணன் நேற்று (சனிக்கிழமை) காலமானார்.

சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர் கண்ணன், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பாரதிராஜாவின் 40 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்

No comments