பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படம் , சின்னம் மற்றும் இலக்கங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுக்கும் வாகனங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோத தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் வாகனங்களுக்கு எதிராக தேர்தல் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவ்வாறான சட்ட விரோத பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் போது அவற்று எதிராக சட்டநடவடிக்கைகள் எடுப்பதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று (14) ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் சோதனைச்சாவடி, நடமாடும் பொலிஸ் சேவை, பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.









No comments