Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா தடுப்பு – மோடி முக்கிய ஆலோசனை


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் மஹாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த மாநிலங்களில் வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கையும்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன், பிரதமர் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய எதிர்வரும் 16ஆம் திகதி அசாம், பஞ்சாப், கேரளா, ஹிமாச்சலபிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களின் முதல்வர்களுடனும் 17ஆம் திகதி தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மீதமுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments