தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது 34ஆவது வயதில் தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ருவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள மோடி, ”சுஷாந்த் சிங் திறமையான நடிகர். சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சினிமாவில் அவர் சிறப்பாக செயற்பட்டார்.
அவரின் வளர்ச்சி பலருக்கு உந்துதலாக இருந்தது. நினைவில் நிற்க கூடிய கதாபாத்திரங்களை அவர் விட்டு சென்றுள்ளார். அவரின் மரணம் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்தினர் இரசிகர்களுக்கு ஆறுதல்கள். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.









No comments