Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தென்மராட்சி இளைஞன் மீது தாக்குதல்.


யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்த நிலையில், வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெற்பேலி மத்திப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் பாலாவியில் இருந்து வந்த இருவர் கசிப்பு அருந்தியதாகவும் அவ்வழியில் சென்ற இளைஞரை கசிப்பு அருந்துவதற்காக அழைத்தபோது அவர் மறுத்ததால் குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments