Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விக்கி பணம் கேட்டதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என சுமந்திரன் எதிர்பார்ப்பு.


தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களின் அடிப்படை வேணவாக்களை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் அரசு தயாராக இருந்தால் மாத்திரமே நாம் ஆதரவு வழங்குவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்டுள்ளார். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை – அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை(14) மதியம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்தினர். இதன்போதே அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.

“நாங்கள் இந்த அரசை ஏற்படுத்திய போது ஆதரவு வழங்கவில்லை. ஆனால் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். அரசியல் தீர்வு எமது வேணவாக்களை நிவர்த்தி செய்வதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம்” என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

No comments