Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு


திருப்பதியில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக பற்றுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனையடுத்து இணையத்தில் மாத்திரம் திருப்பதி கோயில் தரிசன பற்றுச்சீட்டு விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

No comments