Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சி வளாகம் முடக்கம் - 330 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டு, விடுதியில் தங்கியிருந்த 330 மாணவர்களும் தனிமைப்படுத்தப்படுள்ளனர். 

வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 13) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ சிப்பாய் ஆவார்.

அவருக்கு கோரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது.

சகோதரனுக்கு கோரோனா உள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது சகோதரி கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை கம்பஹாவில் இருந்து மதவாச்சி வரை தொடருந்தில் வந்திறங்கி, அங்கிருந்து பேருந்தில் கிளிநொச்சிக்கு வந்திறங்கியுள்ளார்.

அவர் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விடுதியில் தனி அறையில் தங்கியிருந்த போதும் கூட்டு கற்கை (Groun Study) சிற்றுண்டிச் சாலையில் உணவருந்தல் மற்றும் பரீட்சை மண்டபத்தில் ஏனைய மாணவர்களுடன் பழகியிருப்பார் என்ற சந்தேகம் சுகாதாரத் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

மாணவியின் உயிரியல் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அதன் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில் விடுதியில் தங்கியுள்ள 330 மாணவர்களின் வசதி கருதி அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகம் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் உள்ள தொழிநுட்ப பீடம், பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடங்களைச் சேர்ந்தவர் வளாகத்துக்குள் உள்நுழையவும் வெளியேறவும் சுகாதாரத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments