Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வாள் வெட்டுக்குழுக்களுக்கு எச்சரிக்கை!



வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்.ஜி.ரி என்ற உரிமை கோரப்பட்ட அமைப்பு ஒன்றே துண்டுப்பிரசுரங்கள் ஊடாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளிலேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில்  வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவு பதிவாகி வருகின்றன.

மேலும் இத்தகைய சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

ஆனாலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவு இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இந்நிலையிலேயே குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments