Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்வரும் 10 நாட்களுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விசேட திட்டம் நாளை மறுதினம் 31ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளுடன் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கிவரும் 600 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரயில் திணைக்களத்தின் அனைத்து ரயில்களும் குறித்த விசேட நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments