கம்பஹா – வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட பெண் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்









No comments