Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வைத்தியசாலையிலிருந்து தப்ப முயன்ற கைதி உயிரிழப்பு!


நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர், நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த கைதி, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்ல முற்றபட்டபோது, இவ்வாறு 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர், 36 வயதுடைய வடக்கு கதுருவானா பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments