Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தம்


சிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக, நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விளக்கமறியல் கைதிகளுக்கான அடுத்த வழக்கு திகதியை தீர்மானித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மறு அறிவித்தல் வரை கைதிகளை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றும் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.

No comments